10 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்… TFAPA பெருமிதம்

 

2024-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் திரைப்படத் துறை மொத்தம் 10 தேசிய விருதுகளை வென்று பெருமை சேர்த்துள்ளது. இந்த சாதனை, தமிழ்ச் சினிமாவின் படைப்பாற்றல், தொழில்நுட்பத் திறன் மற்றும் தரமான கதை சொல்லலுக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரமாகும்.

‘அமரன்’ திரைப்படம் 3 தேசிய விருதுகளை வென்றது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சிறந்த இயக்குநராகவும், ஆர். கலைவாணன் சிறந்த படத்தொகுப்பிற்கும், ஜி.வி. பிரகாஷ் குமார் சிறந்த பின்னணி இசைக்குமான தேசிய விருதுகளைப் பெற்றனர்.

‘மகாராஜா’ திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றது. அனல் அரசு சிறந்த சண்டைப் பயிற்சியாளராகவும், சச்சனா நமிதாஸ் சிறந்த துணை நடிகைக்குமான விருதையும் பெற்றார்.

‘கேப்டன் மில்லர்’ திரைப்படம், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படமாகத் தேர்வானது. மேலும், நடிகர் தனுஷ் தனது நடிப்பிற்காக Special Mention விருதைப் பெற்றார்.

‘ராயன்’ திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற தேசிய விருதைப் பெற்றது. ‘மெய்யழகன்’ திரைப்படம் சிறந்த ஒலிக்கலவை (Best Sound Mixing) விருதையும், ‘ப்ளூ’ குறும்படம் சிறந்த ஒலி வடிவமைப்பு (Best Sound Design) விருதையும் வென்றது.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA), தேசிய அளவில் தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்த்த அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்புக் குழுவினருக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது. மேலும், சங்கத் தலைவர் டி.ஜி. தியாகராஜன் தயாரித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் தேசிய விருது பெற்றது TFAPA-வுக்கு கூடுதல் பெருமையாக அமைந்துள்ளது.