55 குழந்தைகள் பலி

 

 

உ.பி., மாநிலம் கோரக்பூரில் கடந்த மாதம், ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் குழந்தைகள் பலியான சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்ட மருத்துவமனையில் வென்டிலேட்டர், ஆக்சிஜன் கேஸ் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தினால், இங்கு அனுமதிக்கப்பட்ட 350 குழந்தைகளில் 55 குழந்தைகள் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஜிஎம் ஹோலே கூறுகையில், கடந்த ஆகஸ்ட் மாதம், வென்டிலேட்டர் இல்லாத காரணத்தினால் 55 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. 21 படுக்கைகள், புதிய பிரசவ வார்டு அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. இதனை அமைப்பதற்கு, அங்குள்ள மரம் ஒன்று இடையூறாக உள்ளது

இதனை அகற்ற தற்போது வரை அனுமதி கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். கடந்த 5 மாதங்களில் மட்டும் 187 குழந்தைகள் இந்த மருத்துவமனையில் உயிரிழந்துள்ளன. குழந்தைகள் இறப்பை தொடர்ந்து நாசிக் எம்எல்சியும் மாநில சுகாதார அமைச்சரும் கடந்த வெள்ளிக்கிழமை அவசர ஆலோசனை நடத்தினர். மகாராஷ்டிர முதல்வர் பட்நாவீஸ் கூறுகையில், ” இந்த சம்பவத்தை கோரக்பூர் சம்பவத்துடன் தொடர்புபடுத்துவது சரியல்ல. குழந்தைகள் இறப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். கடந்த வருடம் அதிக குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த வருடம் குழந்தைகள் இறப்பு குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.