2 எம்.எல்,ஏக்கள் தினகரனுடன் சந்திப்பு


அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இல்லத்தில் அதிமுகவை சேர்ந்த கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் மோகன் ஆகியோர் தினகரனை சந்தித்துள்ளனர். டி.டி.வி.தினகரனுக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு அதிகரித்து வருவது தினகரன் எதிர்ப்பு அமைச்சர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.