சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவரவுள்ள 2.o படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஜினி 2.o படத்தின் பட்ஜெட் ரூபாய் 400 கோடி எனவும் இந்த திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க இந்த திரைப்படத்தை 3 டியில் வெளியிடுவது குறித்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் தற்போது உள்ள கேளிக்கை வரி குறித்து சரியான முடிவு வரும்வரை படம் தயாரிக்க மாட்டோம் என்று லைகா அறிவித்துள்ளது.
இந்நிலையில் திரைப்பட விநியோகஸ்தர் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்ரமணியன் சென்னையில் தெரிவிக்கப்பட்ட தகவலில் ரஜினியின் 2.0 படத்துக்காக 3டி தியேட்டர்களாக 300 தியேட்டர்கள் மாற்றப்படுகின்றன. பாகுபலி படத்தின் அனைத்து சாதனைகளையும் 2.0 முறியடிக்கும். என்று கூறியுள்ளார்.