100% காதல்

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர்களில் ஜிவி பிரகாஷ் முக்கியமானவர். டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், எனக்கு இன்னொரு பேரு இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ள ஜிவி பிரகாஷ், தற்போது செம, அடங்காதே, நாச்சியார், குப்பத்து ராஜா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதைத்தொடர்ந்து 4ஜி, ஐங்கரன், 100% காதல், ரெட்ட கொம்பு, சர்வம் தாள மாயம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜிவி பிரகாஷ். இதில், 2011ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘100% லவ்’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் ‘100% காதல்’ படத்தை இயக்குனர் சந்திரமௌலி இயக்கிவருகிறார். நாயகியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். இவர்களை தவிர  நாசர், ஜெயசித்ரா, ஷிவானி படேல், லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகி பாபு, சதீஷ் உள்பட பலரும் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். ஹீரோவாக நடித்திருக்கும் ஜிவி பிரகாஷ் தான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இந்நிலையில், இந்தப் படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.