ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தி இந்தியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது

hockeyஈபோ (மலேசியா): அஸ்லான் ஷா ஹாக்கி போட்டித் தொடரில் இந்திய அணி மலேசியாவை 6-1என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.மலேசியாவின் ஈபோ நகரில் இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து இந்திய அணி இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவை எதிர்க்கொள்கிறது.மலேசியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியினர் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். முதல் ஐந்து நிமிஷங்களில் கோல் அடிப்பதற்கு கிடைத்த 5 வாய்ப்புகளில் ஒன்றே மட்டுமே இந்திய அணியினர் கோலாக்கினர். இந்திய அணியினர் மலேசிய அணிக்கு வாய்ப்பே அளிக்கவில்லை. இந்தியாவின் சார்பில் எஸ்வி.சுனில் (2-வது நிமிஷம்), ஹர்ஜித் சிங் (7-வது நிமிஷம்), ராமன்தீப் சிங் (25 மற்றும் 29), தினேஷ் முஸ்தபா (27), தல்வீர் சிங் (50) ஆகியோர் கோல் அடித்தனர். மலேசியா சார்பில் ஷஹாரில் ஷபா ஒரு கோல் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய 12 புள்ளிகள் எடுத்து பட்டியிலில் இரண்டாம் இடம் பிடித்தது.முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இதன் மூலம் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 18 புள்ளிகள் எடுத்து முதலிடம் பெற்றது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பேட்டியில் இந்திய அணி, தென் கொரியாவுடன் இணைந்து சாம்பியன் பட்டம் பெற்றது. கன மழை காரணமாக அப்போது இறுதிப் போட்டி நடைபெறவில்லை