‘பவர் ஸ்டார்’ என அழைக்கப்படும் டாக்டர் சீனிவாசன், ‘லத்திகா’, ‘அன்புத்தொல்லை’ போன்ற படங்களை தயாரித்து, அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். ஆனால், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ஷங்கர் இயக்கத்தில் வந்த ‘ஐ’ படங்கள் அவரைப் பிரபலமாக்கியது. இப்போது அவர், பல படங்ககளில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு படவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்த பவர் ஸ்டார் தனக்கும் ‘முதல்வர் ஆசை’ இருப்பதாகச் சொல்லி அரங்கத்தை கலகலப்பாக்கினார். “எல்லா நடிகர்களையும் போல எனக்கும் முதல்வராகும் ஆசை இருந்தது. சினிமாவில் நிறைய சம்பாதித்து, கட்சி ஆரம்பித்து, கோட்டையில் இருக்கும் முதல்வர் நாற்காலியில் உட்கார நினைத்தேன். ஆனா, தமிழ் நாட்டில் இப்போது இருக்கும் அரசியல் நெருக்கடியில் அந்த ஆசை நிறைவேறாது! அதனால், சினிமா மூலமா அதை நிறைவேத்திக்கிட்டேன். ஒரு படத்தில் நான் முதல்வரா நடிக்கிறேன். பாக்யராஜ் எனக்கு அரசியல் ஆலோசகரா வர்றார்” என பவர் ஸ்டார் அவர் சொல்லி முடித்த போது அரங்கம் கலகலப்பானது.