மறைந்த முதல்வர் ஜெயலலிதா விடுவிப்பு

உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த பரிசு பொருள் வழக்கில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசும் விடுவிக்கப்பட்டுள்ளனர் ஜெயலலிதா கடந்த, 1992ல் முதல்வராக இருந்த போது, அவரது பிறந்த நாளில் ஏராளமான பரிசு பொருட்களும், காசோலைகள், டி.டி.,க்கள் வந்தன. இதன் மதிப்பு இரண்டு கோடி ரூபாய். முதல்வராக இருப்பவர் தனக்கு வரும் பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும். ஆனால், பரிசு தொகையை தனது சொந்த வங்கி கணக்கில் ஜெயலலலிதா டெபாசிட் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இது குறித்து ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ., மேல்முறையீடு செய்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதா மற்றும் அழகு திருநாவுக்கரசு ஆகியோர் இறந்து விட்டதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
எனினும், செங்கோட்டையன் மீதான வழக்கு கோடை விடுமுறைக்கு பிறகு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.