தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தெலங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், 2 முதல் 3 நாள்களுக்கு ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.இதையடுத்து, தனது பணிகள் அனைத்தையும் முதல்வர் சந்திரசேகர ராவ் ரத்து செய்துவிட்டார். மேடக் மாவட்டத்தில் இருக்கும் பண்ணை வீட்டில் தற்போது அவர் ஓய்வெடுத்து வருகிறார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.