திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இன்று முதல் கட்ட தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார்

Karunaithi kanimozhiகனிமொழி எம்.பி. முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று(திங்கட்கிழமை) சேலத்தில் தொடங்குகிறார். கருணாநிதி சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்பேன் என்று அவர் கூறினார்.தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தனது முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை சேலம் மாவட்டத்தில் இன்று தொடங்குகிறார். இதையொட்டி, சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவர் சந்தித்து வாழ்த்து பெற்றார்.அப்போது கனிமொழி எம்.பி., நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-மக்கள் வெளியே போக வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட கூடிய நேரத்தில், அ.தி.மு.க.வினர் மக்களை பிரசாரத்துக்கு அழைத்து வந்து வெயிலில் கொடுமைப்படுத்துகிறார்கள்.5 ஆண்டு கால ஆட்சியில் கஷ்டப்படுத்தியது போதாது என்று, தற்போது பிரசாரத்தின் வழியாகவும் மக்களை கஷ்டப்படுத்துகிறார்கள். இதை மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்வார்கள்.மக்களை சந்திக்காத, குறைகளை தீர்க்காத முதல்-அமைச்சர் ஜெயலலிதா. தமிழகத்துக்கு வளர்ச்சி திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. மின்மிகை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவேன் என்றார். அதுவும் நடக்கவில்லை. தமிழகம் தொழில்துறையில் கீழே இறங்கி கொண்டிருக்கிறது.தமிழக மக்களின் மிக முக்கிய கோரிக்கை மதுவிலக்கு. அதைப்பற்றி 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது கவலைப்படவில்லை. இன்றைக்கு தேர்தல் நேரத்தில் படிபடியாக மதுவிலக்கை கொண்டு வருவோம் என்கிறார். இது மக்களை ஏமாற்றக்கூடிய ஒன்று தான். இதையெல்லாம் வைத்து, தி.மு.க. தேர்தல் அறிக்கை, கருணாநிதியின் சாதனைகளையும் மக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு சேகரிப்பேன்.அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு மக்கள் எதிர்பார்க்க கூடிய மாற்று தி.மு.க. தான். கருணாநிதி தான்.இவ்வாறு அவர் கூறினார்.