சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம்

dmk-vetpalar-pattiyalமதுரை (வடக்கு) மாவட்டம், சோழவந்தான் (தனி) தொகுதிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுளளது.
சோழவந்தான் (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட ஸ்ரீபிரியா தேன்மொழி அவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் தற்போது அங்கே போட்டியிட முன்வராத காரணத்தால், ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர் சின்னக்கருப்பன் அவர்களின் துணைவியார் சி.பவானி என்பவர் போட்டியிடுவார் என திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது