‘தி பிரைடு ஆஃப் பாரத்’ படத்தில் இணைந்த பூமி சதீஷ் பெட்னேக்கர் – பெலவாடி மல்லம்மாவாக புதிய அவதாரம்

சந்தீப் சிங் இயக்கி தயாரிக்கும் பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படமான ‘தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ படத்தின் நட்சத்திரப் பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.

இந்த நிலையில், நடிகை பூமி சதீஷ் பெட்னேக்கர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். அவர், தனது வீரத்திற்கும் துணிச்சலுக்கும் பெயர் பெற்ற கர்நாடகத்தின் வீர ராணியான பெலவாடி மல்லம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் கதாபாத்திரத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்க, அர்ஜுன் ராம்பால், விவேக் ஓபராய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்திற்கு ரிஷி விர்மானி திரைக்கதை எழுதுகிறார். அமித் திரிவேதி இசையமைக்க, தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி பாடல் வரிகளை எழுதுகிறார்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கவுள்ள நிலையில், தற்போது தீவிரமான முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.