ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறையினர் நீண்ட காலமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். போராட்டமும், அதனை தொடர்ந்து நடைபெறும் பேச்சு வார்த்தையும் வாடிக்கையான ஒன்றாக மாறி விட்டது. ஆனால் தற்போது வரை எந்த முடிவும் எட்டப்படாமல் இழுத்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கடந்த 15-ம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை 48 மணி நேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதனை அடுத்து தமிழக அரசு தொழிற் சங்கத்துடன் நடத்திய பேச்சு வார்த்தையின் விளைவாக இந்த மாதம் 27(இன்று) மற்றும் 28-ம்(நாளை) தேதிகளில் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி முடிவு எடுப்பது என தீர்மானிக்கப்பட்து வேலை நிறுத்தமும் வாபஸ் பெறப்பட்டது. ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட படி
இன்று பேச்சு வார்த்தையானது நடைபெற உள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் போக்குவரத்து பணிமனைகள் முன்னதாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து பேசிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், “அமைச்சர் பிறப்பித்த வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் இன்று மற்றும் நாளை 13-வது கட்ட போக்குவரத்து சங்க பேச்சு வார்த்தையானது நடைபெற உள்ளது. ஊதிய ஒப்பந்தம், ஓய்வு பெற்ற ஊழியர்களின் நிலுவை தொகையை திரும்ப வழங்குதல், பறிக்கப்பட்ட 7 ஆயிரம் கோடி ரூபாயை திரும்ப பெறுதல் உழைத்த கோரிக்கைகளை முன் வைத்து பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. எங்கள் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். முதல் கட்டமாக எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றனர்