இந்தியாவுக்கு ரூ.58 கோடியில் 36 ரபேல் ரக போர் விமானங்கள் -ஒப்பந்தம் இறுதியாகி உள்ளதாக தகவல்

36 ரபேல் ரக போர் விமானங்கள்

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா ரூ.58 ஆயிரம் கோடிக்கு வாங்க உள்ளதாகவும் அதற்கான ஒப்பந்தம் இறுதியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரபேல் போர் விமானம் இந்தியா மற்றும் பிரான்சிற்கு மிகவும் முக்கியமான திட்டமாகும். இது, முன்எப்போதும் இல்லாத வண்ணம் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, மேக் இன் இந்தியா திட்டம் உள்ளிட்டவையில் அடுத்த 40 வருடங்களுக்கு ஒத்துழைப்பிற்கு வழிவகைசெய்யும்.

இந்திய விமானப்படைக்கு பிரான்ஸிடமிருந்து 120 ரபேல் போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது. விலை பேரம் காரணமாக இந்த ஒப்பந்தம் நீண்ட காலமாக நிறைவேறவில்லை. பிரதமர் மோடி கடந்தாண்டு பிரான்ஸ் சென்றபோது 36 ரபேல் விமானங்களை வாங்குவதை உறுதி செய்தார். இவற்றை சப்ளை செய்ய பிரான்ஸ் ரூ.80 ஆயிரம் கோடி கேட்டது. விமானத்தின் விலையை குறைக்க இந்தியா பேரம் பேசி வந்தது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா ரூ.58 ஆயிரம் கோடிக்கு வாங்க உள்ளதாகவும் அதற்கான ஒப்பந்தம் இறுதியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாடானது ரூ.80 ஆயிரம் கோடி இந்த ஒப்பந்தத்திற்காக கோரியிருந்தது. பேரத்தின் முடிவில் இந்தியா சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் குறைத்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் இன்னும் 3 வாரத்தில் கையெழுத்தாகிறது. முதல் ரபேல் போர் விமானம் இந்தியா வர குறைந்தது 18 மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது..