ஆன்லைனில் விலை போன பாக் பிரதமர் நவாஸ் செரீப் -பரபரப்பு தகவல்கள்

nawas

உபயோகமற்ற பிரதமர் என சித்தரித்து நவாஸ் செரீப்பை ஆன்லைனில் ரூ.60 லட்சத்துக்கு விற்பதாக அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப். இவர் தனது 2 மகன்கள், மற்றும் மகள் மரியம் பெயரில் வெளிநாடுகளில் கம்பெனி நடத்துவதாக பனாமா ஆவணங்கள் மூலம் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரை ஆன்லைன் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப் போவதாக அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தானில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆன்லைனில் இந்த அறிவிப்பு வெளியானது.அதில் “உபயோகமற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் விற்பனைக்கு என தலைப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவரை இது பணி செய்ய முடியாத நிலையில் உள்ளது. எப்போதும் பணியாற்றாது. அது பிறவியிலேயே ஊழல் நிறைந்தது. இதன் குடும்பமே கோளாறு மற்றும் ஊழல் நிறைந்தது. எனவே இந்த நோயை எடுத்து சென்று அகற்றி விடுங்கள். இவருடன் அவரது தம்பி ஷாபாஷ் செரீப்பையும் தூக்கி எறிந்துவிடுங்கள். அவரை இலவசமாக தருகிறோம்” என கூறப்பட்டிருந்தது. ஷாபாஷ் தற்போது பஞ்சாப் மாகாண கவர்னராக இருக்கிறார்.இறுதியில் நவாஸ்செரீப் தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்று இருக்கிறார். அங்கு மிஸ்டர் 10 சதவீதத்திடம் ஆலோசனை பெறுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. ‘மிஸடர் 10 சதவீதம்‘ என முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை குறிப்பிட்டுள்ளனர். அவரும் ஊழல் வழக்கில் சிக்கியுள்ளார். ஆன்லைனில் இந்த விளம்பரம் கடுமையாக பரவி பரபரப்பை எற்படுத்தியது. இந்த ஏலம் நேற்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது பரபரப்பான சிறிது நேரத்தில் இணையதளத்தில் இருந்து அகற்றப்பட்டது.