அமெரிக்காவில் ரக்பி விளையாட்டு வீரர் சுட்டு படுகொலை

_Former-Super-Bowl-Winner-Will-Smith-Shot-To-Death-Last-Night_அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த வில் சுமித் நியூ ஆர்லியான்ஸ் செயின்ட்ஸ் ரக்பி அணியில் முன்னணி வீரராக திகழ்ந்தார். கடந்த 2010ல் தேசிய கால்பந்து லீக்கில் சாம்பியன் பட்டத்தை இவரது அணி பெற்றது. 2014ம் ஆண்டில் ரக்பி போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.
சமீபத்தில் இவர் தனது மனைவியுடன் காரில் சென்ற போது பின்னால் வந்த மற்றொரு இவரது காரில் மோதியது. இதில் கார் டிரைவர் கார்டெல் ஹெயிஸ் என்பவருக்கும், சுமித்துக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ஹெயிஸ் கைத்துப்பாக்கியால் சுமித்தை சுட்டுக்கொன்றார்.இதில் சுமித்தின் மனைவிக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் ஹெயிசை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.