கோவில்பட்டி நகரில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை ஒன்று மாற்றப்பட்டு சாலைப்புதூர் விலக்கு – ஆலம்பட்டி இடையில் தோணுகால் சாலையில் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று புதியதாக திறக்கப்படவுள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில் இறக்கப்படவுள்ளதாக தகவல் தெரிந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு கடையின் முன்பு திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது மழை கொட்டியது போது கொடையை பிடித்து கொண்டு தங்களது போராட்டத்தினை தொடர்ந்தனர். இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் பெண்கள், பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள் பாதிக்குப்படும் நிலை உள்ளதால், இங்கு டாஸ்மாக் கடை அமைப்பதை தடுக்க வேண்டும் என்றனர். இதனை தொடர்ந்து கோவில்பட்டி தாசில்தார் ஜான்சன் தேவசாகயம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே போராட்டம் கைவிடப்படடது.