நாளுக்குள் நாள் ஒரு பரபரப்பு நடைபெற்று வருவது என்பது தொடர்கதையாகியே உள்ள நிலையில், நாளை தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் டெல்லி சென்று இரு அணிகள் சார்பில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிராமண பத்திரங்களை வாபஸ் பெறுவார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ள சிறிது நேரத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்,ஏக்கள் நாளை டெல்லி சென்று குடியரசு தலைவரிடம் முறையிட போவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது என்பது தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு அணிகள் இணைந்த போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு உள்ள ஆதரவை திரும்ப பெறுகிறோம் என்று தினகரன் ஆதரவு எம்,எல்,ஏக்கள் தமிழக பொறுப்பு ஆளுநரிடம் மனு அளித்திருந்தனர். தங்களது மனுவிற்கு ஆளுநரிடம் இருந்து முறையான எந்த ஒரு தகவலும் வெளிவராததால் இது குறித்து குடியரசு தலைவரிடம் தினகரன் ஆதரவு எம்,எல்,ஏக்கள் முறையிட திட்டம் வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆதரவு எம்,எல்,ஏக்கள் ஆகிய மூன்று தரப்பினரும் டெல்லி பயணம் என்பது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற பரபரப்பை அதிகரித்துள்ளது.