ஏழை மாணவர்களின் கல்விக்காக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய விஷால்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று (வியாழக்கிழமை) அனுசரிக்கப்பட்டது. கலாமின் நினைவிடம் இருக்கும் பேய்க்கரும்பில் இருக்கும் அப்துல் கலாமின் நினைவிடத்தில் கலாம் அவர்களுக்கு மணிமண்டம் கட்டப்பட்டுள்ளது. அதனை பிரதமர் மோடி நேற்று (வியாழக்கிழமை) ராமேஸ்வரம் சென்று திறந்துவைத்து பார்வையிட்டார்.  மேலும் வைரமுத்து வரிகளில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள சலாம் சலாம்… கலாம் கலாம்… என்ற பாடலும் வெளியிடப்பட்டது.

இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். இயக்குநர் வஸந்த் இந்தியா முக்கிய இடங்களில் இந்த பாடலை இயக்கியிருக்கிறார்.  பல்வேறு பகுதிகளிலும் அப்துல் கலாம் நினைவுநாள் நேற்று (வியாழக்கிழமை) அனுசரிக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், தென்னிந்தியா நடிகர் சங்க பொது செயலாளருமான நடிகர் விஷால், அப்துல்கலாம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தேவி அறக்கட்டளை மூலம் ரூ.10 லட்ச ரூபாய் மதிப்புள்ள உதவி தொகையையும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி கட்டணம் செலுத்துவதற்காக வழங்கினார்.