அரசியல் சுயலாபத்துக்காக பாஜகவுடன் நிதிஷ் குமார் இணைந்துள்ளார் – ராகுல் காந்தி

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், மெகா கூட்டணியில் இருந்து விலகும் முடிவை நிதிஷ் குமார் 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்னரே எடுத்துவிட்டார் என்பதை நான் அறிவேன். மதவாதத்துக்கு எதிராக போராடப்போவதாக நிதிஷ் எங்களுடன் இணைந்தார்.

ஆனால், தனது அரசியல் சுயலாபத்துக்காக யாரை எதிர்த்தாரோ அவர்களோடு இப்போது இணைந்துள்ளார். இதுதான் இந்திய அரசியலின் பிரச்சினை. அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ண ஓட்டம் இதுதான் என்பதை யூகிக்க முடியும். அந்தவகையில் நிதிஷ் குமார் மனதில் கடந்த 3, 4 மாதங்களாக எந்த மாதிரியான எண்ண அலைகள் இருந்தது என்பது எனக்குத் தெரியும்.

சுயநலத்துக்காக சிலர் என்னவேண்டுமானாலும் செய்வார்கள். கொள்கையும், நம்பகத்தன்மையும் இல்லை. அதிகாரத்துக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.