பிசிசிஐ, விராட்-அனுஷ்காவுக்கு ட்விட்டரில் வாழ்த்து

இத்தாலியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி- பாலிவுட் பிரபலம் அனுஷ்கா சர்மா திருமணம் நடைபெற்றது. விராட் கோலி தனது திருமண புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டார். இதனையடுத்து, புதுமண தம்பதிகள் இருவருக்கும் பிசிசிஐ ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது. ‘அன்பான இந்த தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என கூறியுள்ளது. மேலும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், உமேஷ் யாதவ், புஜாரா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் வாழ்த்து மழையில் நனைந்துள்ளனர் விராட்-அனுஷ்கா தம்பதியினர்.

தொடர்ந்து பிசிசிஐ முன்னாள் இயக்குனர் அனுராக் தாகூர், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ரம்பால், குத்துச்சண்டை வீராங்கனை கீதா போகத் என விளையாட்டுத்துறையில் உள்ளவர்களும், பாலிவுட் பிரபலங்கள் பலரும் விராட்-அனுஷ்கா தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.