சி.பி.எஸ்.சி. 3வது வகுப்பு பாடப்புத்தகத்தில் தளபதி விஜய்யின் புகைப்படம்

தளபதி விஜய் நடித்து வெளிவந்த ‘மெர்சல்’ படத்தில் வேஷ்டி சட்டை அணிந்து தமிழரின் பாரம்பரியத்தை பற்றி பேசியிருப்பார். அதற்கு பெரும் வரவேற்பு மக்களிடையே கிடைத்தது. இந்த நிலையில், சிபிஎஸ்இ 3வது வகுப்பு பாடப்புத்தகத்தில் வேஷ்டி சட்டை தமிழர்களின் பாரம்பரியம் என்ற ஒரு தலைப்பில் விஜய்யின் வேஷ்டி சட்டை புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகையைப் பற்றிய அந்த வரியில் வேஷ்டி சட்டை தான் தமிழர்களின் பாரம்பரிய உடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, வேலாயுதம் படத்தில் விஜய் வேஷ்டி சட்டையுடன் நடந்து வரும் போட்டோவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  புத்தகத்தில் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் தற்போது அந்தப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.