விஜயானந்த் விமர்சனம் 3/5

விஜய் சங்கேஷ்வர் தனது தந்தையின் பழைய மாடல் பிரிண்டிங் பிரஸ்ஸை விரைவுபடுத்த புதிய செமி ஆட்டோமேட்டிக் பிரிண்டிங் மெஷினை கொண்டு வருகிறார். அப்பா பத்து நாளில் செய்வதை மகன் ஒரே நாளில் செய்து முடிக்க தொழில் விரிவடைகிறது. விஜய் சங்கேஷ்வருக்கு வியாபாரத்தில் எதிலும் வேகம் தேவை என்பதால் அவர் பிரிண்டிங் பிரஸ்ஸை விட்டு வெளியேறி அனுபவமே இல்லாத போக்குவரத்து துறையில் நுழைகிறார். முதலில் ஒரு லாரியை வாங்க தன் தந்தையிடம் கேட்க நினைக்க, அவரோ இதில் விருப்பம் இல்லை என்று சொல்லி விடுகிறார். அதனால் விஜய் சங்கேஷ்வர் கடன் கொடுக்கும் ரவிச்சந்திரனின் நம்பிக்கை பெற்று முதலில் ஒரு லாரியை வாங்க, பின்னர் அது நான்கு லாரிகளாக அதிகரிக்கிறது. தன் வியாபார தொழில் நுணுக்கத்தை பயன்படுத்தி லாரிகளுக்கு மஞ்சள் கலரில் வர்ணம் பூசி விஆர்எல் லாகிஸ்டிக்ஸ் என்ற போக்குவரத்து கம்பெனியை தொடங்கி வெற்றிகரமாக நடத்துகிறார்.

இந்த யுக்தி மற்ற கம்பெனிகளுக்கு முன்னுதாரணமாக விளங்க, வியாபார உலகிலும், வங்கிகளிலும் விஜய் சங்கேஷ்வரின் பெயர் கொடிகட்டி பறக்கிறது. இதில் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார் மற்றும், அரசியலில் ஈடுபட, முக்கிய நாளேட்டில் தவறாக சித்திரக்கப்படுகிறார். இதனால் ஆவேசத்துடன் ஒரு செய்தித்தாள் தொடங்குகிறார். அதற்கும் சிக்கல் வர அதனை விற்று விடுகிறார்.

அதன் பின் வாழ்க்கையில் எப்படி படிப்படியாக சாதித்து முன்னேறினார்? அதற்கு அவருடைய மகன் ஆனந்த் சங்கேஸ்வரின் முக்கிய பங்கு என்ன? என்பதுதான் விஜயானந்த் படத்தின் கதை.

நடிகை-நடிகர்கள்:

நிஹால் ராஜ்புத், ஸ்ரீஅனந்த் நாக், பிரகாஷ் பெலவாடி, வி ரவிச்சந்திரன், அனிஷ் குருவில்லா, வினயா பிரசாத், சிரி பிரஹலாத், பாரத் போபண்ணா, நிஹால், ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைன் ஷெட்டி, அர்ச்சனா கோட்டிகே மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பாளர் – விஆர்எல் பிலிம் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – ரிஷிகா சர்மா
இசையமைப்பாளர் – கோபி சுந்தர் சி
ஒளிப்பதிவு – கீர்த்தன் பூஜாரி
எடிட்டர் – ஹேமந்த் குமார் டி
பாடல்கள் – விஜய் பிரகாஷ், கீர்த்தினா வைத்தியநாதன்
சண்டை – ரவி வர்மா
நடனம் – இம்ரான் சர்தாரியா
ஒப்பனை – பிரகாஷ் கோகக்
உடை – ரிஷிகா சர்மா
மக்கள் தொடர்பு – யுவராஜ்