விஜய் சேதுபதியின் நியூ லுக்

விஜய் சேதுபதி நடிப்பில் வந்த இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஜுங்கா என்கிற படத்தை இயக்குகிறார். இதில், லண்டனில் வாழும் ஸ்டைலிஷ் டானாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக வனமகன் பட நாயகி சாயிஷா நடிக்கிறார். வெளிநாட்டிலேயே பிறந்து, வளர்ந்த பெண்ணாக அவர் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார்.

இதுவரை விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் என்பதால், விஜய் சேதுபதியே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பே, படத்தின் தியேட்டர் உரிமையை வாங்கியிருக்கிறார் நடிகரும், அரசியல்வாதியுமான அருண் பாண்டியன். இந்நிலையில், ஜுங்கா படத்துக்காக நியூ லுக்கில் இருக்கும் புகைப்படம் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களை கலக்குகிறது.