விருந்து கொடுத்த விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நள்ளிரவு 12 மணிக்கு நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார்.
பிறந்த நாளை முன்னிட்டு விஜய் சேதுபதி நடித்து வரும் ‘சீதக்காதி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கின்றனர். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை யாரும் பார்த்திராத விஜய் சேதுபதியை இந்த போஸ்டரில் காண முடிகிறது. இது விஜய் சேதுபதியின் 25வது படமாகும். இந்த போஸ்டர் விஜய் சேதுபதிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. மேலும் படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக இப்படத்தின் இயக்குனர் பாலாஜி தரணீதரன், ‘சீதக்காதி’ படத்தின் போஸ்டர் ரசிகர்களின் வாயை பிளக்க வைக்கும் என்று கூறினார். அதன்படியே இந்த போஸ்டர் அமைந்திருக்கிறது.விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் மற்றொரு படமான ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.