குழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாக தயாராக இருக்கும் “ஆக்டோபஸ்”

“வீரையன்” இயக்குனர் s. பரீத் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படைப்பு “ஆக்டோபஸ்”. இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்களோடு, முதன்மை கதாப்பாத்திரத்தில் “ஆக்டோபஸ்” ஒன்றும் நடிக்க இருக்கிறது.

“அனகோண்டா”, “கிங்காங்க்”, “லைஃப் ஆஃப் பை” ஆகிய படங்களை போல குழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாக இப்படம் தயாராக உள்ளது. ஆக்‌ஷன் மற்றும் திரில்லர் கலந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட இருக்கும் இப்படத்திற்கான, முதல் கட்ட தொழில்நுட்ப பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.