வெருளி – சினிமா விமர்சனம்

படத்தின் தொடக்கத்திலேயே மினி பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தில் சில பேர் உயிரிழக்கிறார்கள். சில பேர் காயத்துடன் உயிர் தப்பிக்கிறார்கள். போலீஸ் அதிகாரியான நாயகன் அபிஷேக் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருப்பவர்களை எல்லாம் அப்புறப்படுத்தி, அந்த இடத்தில் சிதறிக் கிடக்கும் பொருட்களையெல்லாம் சேகரிக்கும்போது ஒரு எந்திர தகடும் கிடைக்கிறது. அதையெல்லாம் எடுத்து காவல் நிலையத்தில் அபிஷேக் வைக்கச் சொல்கிறார்.

இந்நிலையில், இரவு ரோந்து பணியின்போது ஒரு தம்பதியிடம் மர்ம நபர் ஒருவர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முயற்சிக்கிறார். அப்போது, அவர்களை அபிஷேக், தம்பதியரை அந்த மர்ம நபரிடமிருந்து காப்பாற்றுகிறார். அந்த இடத்திலும் அபிஷேக்குக்கு ஒரு எந்திர தகடு கிடைக்கிறது. மினி பஸ் விபத்து நடந்த இடத்திலிருந்து கிடைத்த எந்திர தகடும், வழிப்பறி கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த எந்திர தகடும் ஒன்றையொன்று ஒத்துப்போகிறது. 

நடந்த சம்பவங்களுக்கும் அந்த தகட்டுக்கும் ஏதாவதும் சம்பந்தம் இருக்குமா? என்று விசாரித்துக் கொண்டிருக்கையில், டிவி ரிப்போர்ட்டரான நாயகி அர்ச்சனா சிங் இந்த தகவலை அறிந்துகொண்டு அவளும் இதுகுறித்த விசாரணையில் களமிறங்குகிறாள். இதன்பின்னர், ஒரு விபத்தில் குழந்தை இறக்க, அந்த இடத்திலும் ஒரு எந்திர தகடு கிடைக்கிறது. 

அந்த தகடுக்கும் இந்த சம்பவத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்பதை அப்போதுதான் அபிஷேக் உறுதிபடுத்துகிறார். உண்மையில் அந்த தகடுக்கும் நடந்த சம்பவங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இதெல்லாம் எதற்காக நடக்கிறது? யாரெல்லாம் இதன் பின்னணியில் இருந்து செயல்படுகிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை. 

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்