சங்கர் சாரதி இயக்கத்தில், சேத்தன் சீனு, ஆஷ்னா சாவேரி, மனோபாலா, சாய் தீனா, பிரேம்குமார், கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் வள்ளுவன்.
சென்னையில் உணவு விநியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார் நாயகன் சேத்தன் சீனு. ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியோர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார் நாயகி ஆஷ்னா சாவேரி.
ஆஷ்னா சாவேரியின் இந்த உதவி செய்யும் மனப்பான்மையை பார்த்து சேத்தன் சீனுவும் அந்த முதியோர் இல்லத்திற்கு பல்வேறு உதவிகளை ஆஷ்னாவுக்கு தெரியாமலேயே செய்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் ஆஷ்னாவுக்கு தெரிய வர இருவரும் நட்பாக பழகுகிறார்கள் சில நாட்கள் அது காதலாக மாறுகிறது.
இது ஒரு புறம் இருக்க, மறுபுறத்தில் அரசியல்வாதியாக இருக்கும் ஒருவரை ஒரு மர்ம மனிதர் கொலை செய்து அவருடைய உடலில் சில தமிழ் எழுத்துக்களை எழுதிவிட்டு செல்கிறார்.
அந்த கொலையை விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டரும் அதே முறையில் கொலை செய்யப்படுகிறார்.
இந்த கொலைகளை விசாரிப்பதற்காக பிரேம்குமார் நியமிக்கப்படுகிறார். பிரேம்குமார் விசாரித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் வழக்கறிஞர் ஒருவரும் அதே முறையில் கொலை செய்யப்படுகிறார்.
அந்த கொலையை பார்க்கும் பிரேம்குமார் அந்த உடம்பில் எழுதப்பட்டிருக்கும் எழுத்து திருக்குறள் என்பதை கண்டறிகிறார். குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற அதனுடைய அர்த்தத்தையும் புரிந்து கொள்கிறார். கொலை செய்தவன் நன்கு படித்தவன் தான் என்பதையும் முடிவு செய்கிறார்.
பிரேம்குமாருக்கு சேத்தன் மீது சந்தேகம் ஏற்பட அவரை தன்னுடைய கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்கிறார்.
அந்த விசாரணையில் பிரேம்குமார் சேர்த்தன்தான் குற்றவாளி என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? இந்த கொலைகளை செய்வதற்கான காரணம் என்ன என்பதையும் பிரேம்குமார் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே வள்ளுவன் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுத்து மற்றும் இயக்கம் : சங்கர் சாரதி ஒளிப்பதிவு : சுரேஷ் பாலா
படத்தொகுப்பு : சான் லோகேஷ்
இசை : அஸ்வத்
தயாரிப்பு நிறுவனம் : ஆறுபடை ப்ரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் : ஷைல்குமார் ராஜேந்திரன், வி. பாலச்சந்தர், நஞ்சுண்டே கவுடா, சதீஷ் ராஜேந்திரன்
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்

