வடபழனி முருகன் கோவிலில் சமபந்தி விருந்து

இந்திய சுதந்திரத் திருநாளையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு சமபந்தி உணவு அருந்தினார். இதில் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் தி.நகர் பி.சத்திய (எ) சத்தியநாராயணன், கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.