ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேறவும், அகதிகள் குடியேறவும் Donald Trump நிர்வாகம் விதித்த தடையை Seattle நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, அமெரிக்க அரசு தற்காலிகமாக தடை உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, தடை விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவுக்கு வர தொடங்கியுள்ளனர். ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் யேமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர 90 நாட்களும், சிரியாவை தவிர மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளாக அமெரிக்காவில் குடியேற 120 நாட்களும் தடை விதித்து கடந்த மாதம் 27ஆம் தேதி அதிபர் Donald Trump நிர்வாக உத்தரவு பிறப்பித்தார். இதற்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் பேரணி நடத்தி தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், டிரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து Seattle நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி James Robart அதிபரின் நிர்வாக உத்தரவை தற்காலிகமாக ரத்து செய்தார். இதனைத்தொடர்ந்து, அமெரிக்க நிர்வாகம், டிரம்பின் நிர்வாக உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது. அதேசமயம், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, 9-வது அமெரிக்க Circuit மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ந்நிலையில், தடை விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவுக்கு வர தொடங்கியுள்ளனர்.