உரு – சினிமா விமர்சனம்

பிரபல எழுத்தாளர் கலையரசன், தனது மனைவி தன்ஷிகா உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தொடக்கத்தில் அவர் எழுதிய கதைகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், வர்த்தக ரீதியாகவும் நல்லவிதமாக அமைந்தது. ஆனால் சமீபத்தில் கலையரசன் எழுதிய கதைகள் மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லாமல், பழைய பாணியிலேயே இருப்பதால் போதிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், கலையரசனின் கதைகள் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப வித்தியாசமாக இல்லை. காதல், செண்டிமண்ட் என அரைத்த மாவையே அரைக்காமல் புதுமையாக யோசித்து எழுதும்படி சிலர் அவருக்கு அறிவுரை கூறுகின்றனர்.

தன்ஷிகாவும் கதை எழுதுவதை விட்டுவிட்டு படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை பார்க்கும்படி கலையிடம் கூறிவருகிறாள். ஆனால் கதை எழுதுவதில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் கலையரசனுக்கு, ஒரு கட்டத்தில் த்ரில்லர் கதை எழுதுவதற்கான துணுக்கு ஒன்று கிடைக்கிறது. எப்போதுமே டிரெண்ட் மாறாத ஒரே எமோஷன் “பயம்” என்பதால் ஒரு வித்தியாசமான கதையை எழுத முடிவு செய்து மேகமலைக்கு செல்கிறார். மேகமலை காட்டில் அமைதியான இடத்தில் இருக்கும் ஒரு தனி வீட்டிற்கு சென்று கதை எழுத ஆரம்பிக்கிறார். அங்கு சில மர்மமான சம்பவங்கள் அவருக்கு நிகழ ஆரம்பிக்கின்றன.

அதுவும், கலையரசன் என்ன எழுதுகிறாரோ, அது உண்மையாகவே நடக்க ஆரம்பிக்கிறது. தொடக்கத்தில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இருக்கும் கலையரசனுக்கு, தான் எழுதும் கதை அப்படியே நடப்பது குறித்து வியப்பும், பயமும் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவரது கதையில் வரும் சீரியல் கில்லர், கலையரசனையே கொல்ல வருகிறான். அந்த சீரியல் கில்லர் யார்? கலையரசன் எழுதும் கதை அப்படியே நடப்பதற்கான காரணம் என்ன? அந்த கில்லர் ஏன் கலையரசனை கொல்ல வருகிறான்? அதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்