உ.பி.அரசு புதிய அறிவிப்பு

அரசுப்பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள், பேருந்தினை இயக்கம் பொழுது செல்போனில் பேசிக்கொண்டிருந்தால், அதை புகைப்படம் எடுத்து அம்மாநில போக்குவரத்துறை வழங்கியுள்ள பிரத்யேக வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பினால், புகார் அளித்தவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தினை துவக்கி வைத்து, உத்தரபிரதேச மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்வந்திரே தேவ் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், குறிப்பிட்ட ஒரு பேருந்து ஓட்டுநர் மீது புகார் அளிக்கப்பட்டால், முதலில் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அந்த ஓட்டுநருக்கு எதிராக தனியாக புகார் பதிவு செய்யப்படும். பின்னர் அதனைத் தொடர்ந்து ஆறு மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.