நடிகர் கமல்ஹாசன் நேற்றிரவு தனது டிவிட்டர் பக்கத்தில் கவிதை வடிவில் சில கருத்துக்களை பதிவிட்டிருந்தார். அதில்,
“நேற்று முளைத்த காளான்கள்போல் வரும் விமர்சனங்கள் விரைவில் உண்மை எனும் வெயிலில் காயும்.
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கத் தயங்க மாட்டோம்.
அடிபணிந்து செல்பவர்கள் அடிமைகளா?
ஆட்சியில் இல்லாதவர்களும் தோற்றவர்களா?.
தோல்வியை அறிபவன் போராளி, முடிவெடுத்தால் நானும் முதல்வரே”
என்று கருத்துக்களை பதிவிட்டிருக்கிறார். தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நபர்களை அமைதிப்படுத்தும் வகையில் விரைவில் ஒரு அறிவிப்பு வரும் என கமல்ஹாசன் கூறிருந்தார். நடிகர் கமலின் இந்த பதிவிற்கு நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பாகத்தான் தெரிகிறது என பதிவுட்டுள்ளார்.
அரசியலில் இறங்குவதற்கான அறிவிப்பாகதான் புரிந்துகொள்வதாகவும் அதற்கு வாழ்த்துகள் கூறியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் தமிழக பாஜகவில் கமலின் இந்த பதிவிற்கு கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக மாநில தலைவர் தமிழிசையும், ஹெச்.ராஜாவும் கருத்து தெரிவித்திருப்பது புயலை கிளப்பியுள்ளது.