அமெரிக்கா சென்றுள்ள இந்தியா பிரதமர் மோடி முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். முன்னதாக வெள்ளை மாளிகைக்கு வருகை புரிந்த இந்தியா பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் அவரது மனைவி மெலனியாவும் சேர்ந்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தெரிவித்துக்கொண்டு மோடி இது தமக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட மரியாதை அல்ல என்றும் 125 கோடி இந்திய மக்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என மோடி பெருமிதத்துடன் கூறினார்.
மோடியின் பேச்சுக்கு பதிலளித்த டிரம்ப் சிறந்த பிரதமராக விளங்கும் தங்களை வரவேற்பதில் பெருமை கொள்வதாகவும், நீங்கள் பொருளாதார ரீதியாக் மிகச் சிறப்பாக செயலாற்றி இருப்பதாகவும், பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதாவும் டிரம்ப் பதிலளித்துள்ளார்.