பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது டிஐஜி ஆய்வில் அம்பலம்.
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்து ஒரு படகையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் : 6 வயது சிறுமி உயிரிழப்பு.
ஜம்மு-காஷ்மீர் – எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல்.
சென்னை அடையாறு இல்லத்தில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 எம்எல்ஏக்களுடன் டிடிவிதினகரன் ஆலோசனை.
டிடிவி தினகரன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கப்பிரிவு வழக்கு.
தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரங்கள் போலியானவை – அமைச்சர் சிவி.சண்முகம்.
தலைமைச் செயலகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குகள் பதிவான பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூலை 20ஆம் தேதி காலை 11மணிக்கு தொடக்கம்.
சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக கூறிய கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம்.
லஷ்கர்- இ -தொய்பா தீவிரவாதி மும்பை விமான நிலையத்தில் கைது.
டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்புக்கு எதிரான வழக்கில் தீர்ப்புதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.
சென்னை மாகாணம் என்ற பெயர் தமிழ்நாடு என மாற்றப்பட்டு நாளையுடன் 50 ஆண்டு நிறைவு : வைகோ.
ரூ.2 கோடி பெற்று சசிகலாவுக்கு சலுகை தந்ததாக கூறப்படும் ஏடிஜிபி சத்யநாராயணாவும் இடமாற்றம்.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி கவலைக்கிடமான நிலைக்கு வந்துவிட்டது – திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
எம்.எல்.ஏ பதவிக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்க கோரிய வழக்கு தள்ளுபடி.
நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளை மாற்றம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது : லத்திகா சரண்.
சத்யநாராயணாவுக்கு பதிலாக ஏ.எஸ்.என்.மூர்த்தி கர்நாடக சிறைத்துறை ஏடிஜிபியாக நியமனம்.
இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற லஞ்சம் கொடுத்த வழக்கு ஜூலை 25ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
டிஐஜி ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டது நிர்வாகரீதியான நடவடிக்கையே – முதல்வர் சித்தராமையா.
கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா பெங்களூரு நகர போக்குவரத்து ஆணையராக மாற்றம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் & மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு.
நடிகர்களை மிரட்டுவதாக திமுக ஆட்சியில் முதல்வர் விழாவில் அஜித் பேசியபோது கமல் எங்கு சென்றார்? – அமைச்சர்
எம்.எல்.ஏக்களுக்கு கல்வித்தகுதி நிர்ணயிக்க நாடாளுமன்றத்தில் தான் சட்டம் இயற்ற வேண்டும்: உச்சநீதிமன்றம். – சிவி.சண்முகம்.
சிவாஜி சிலையை கடற்கரை சாலையில் இருந்து அகற்றி மணிமண்டபத்தில் வைக்க தடையில்லை – உயர்நீதிமன்றம்.
கமல்ஹாசனுக்கு ஆதரவளிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது திமுக. கமலுக்கு தைரியம் இருந்தால் அரசியலுக்கு வந்து கருத்து சொல்லட்டும். கமல் கூறும் கருத்துக்களுக்கு அமைச்சர்கள் பதில் மட்டுமே கூறுகின்றனர் – அமைச்சர் ஜெயக்குமார்.
சென்னையில் உள்ள நடிகர் சிவாஜி சிலையை இடமாற்றம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு: 4 வாரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
நடிகர் கமல்ஹாசன் மீது தவறு ஏதுமில்லை; அவரை அமைச்சர்கள் விமர்சிக்கக் கூடாது – ஓ.பி.எஸ். ஆதரவாளர் கேபி.முனுசாமி.
கமல் மீது வழக்குப் போடுவேன் என்று சொல்லக்கூடிய தைரியம் உள்ளவர்கள் எங்கள் மீது வழக்கு போட தயாரா ?- முக.ஸ்டாலின்.
முதல்வர் மற்றும் 4 அமைச்சர்களை தகுதியிழப்பு செய்யக் கோரும் வழக்கு ஆக.1ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
மத்திய அரசுக்கு அடிபணியாமல் தமிழர்கள் ஓரணியில் நின்று உறுதியேற்க வேண்டுமென வைகோ அறிக்கை.
விதிமுறைகளை செயல்படுத்தாத தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய தலைவர் ஆஜராக உத்தரவு.
நடிகர் கமல்ஹாசன் மீதான அமைச்சர்கள் பேச்சு கண்டனத்திற்குரியது – திருநாவுக்கரசர்.
ஊழல் நடக்கிறது என்றால் யார் செய்கிறார்கள் என்பதை கமல் வெளிப்படையாக சொல்ல வேண்டும் – நாஞ்சில் சம்பத்.
கமலை ஒருமையில் பேசுவதும், வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் மிரட்டக்கூடாது – நாஞ்சில் சம்பத்.
தடையை நீக்கி சொத்துகளை விற்க அனுமதி கோரிய வழக்கில் சரத்குமார், ராதிகாவுக்கு ரூ.2 லட்சம் அபராதம்.
சரத்குமார், ராதிகா மற்றும் மாஜிக் பிரேம்ஸின் 4 வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற 700 ஒப்பந்த தொழிலாளர்கள் கைது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% உள்ஒதுக்கீடு அரசாணை ரத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு.
பெரம்பலூர் – 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொன்னுசாமி என்ற 81 வயது முதியவர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு.
சேலத்தில் நக்சலைட் எனக் கூறி கைதான இளம்பெண், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.
கடலூர் – குள்ளஞ்சாவடி அருகே கடன் தொல்லையால் தனது 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் கொன்றார்.
தஞ்சை – கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்.
திருப்பதி கோயிலுக்கு பாதயாத்திரை வரும் முதல் 20,000பேருக்கு மட்டுமே திவ்ய தரிசனம் டிக்கெட்.
இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 4 பேருக்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்.
வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்.
சேலம்,செயில் விஸ்வேஸ்வர்யா, பத்ராவதி இரும்பாலை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல்.