நாளை வட சென்னையில் குடிநீர் விநியோகம் இல்லை

நாளை காலை 10மணி முதல் நாளை மறுநாள் காலை 10 மணி வரை வடசென்னை பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. மீஞ்சூர், காட்டுப்பள்ளியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில், பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக வட சென்னை பகுதிகளான திருவொற்றியூர், மணலி, மாதவரம், கொடுங்கையூர், கத்திவாக்கம், எர்ணாவூர், பட்டேல் நகர், ஆர்கே நகர், கண்ணதாசன் நகர், எம்கேபி நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நாளை இருக்காது. ஆகவே மக்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை சேமித்து வைத்து கொள்ளுமாறு குடிநீர் வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.