திருநங்கைகளுக்கு இடமில்லை: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

 திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்தார். இந்த திட்டத்தை பலரும் ஆதரித்தனர். ஆனால், அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேருவது வரும் ஜனவரி 1ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.நம்முடைய ராணுவம் மிகப்பெரிய வெற்றிகளில் கவனம் செலுத்த வேண்டும். திருநங்கைகளால் ராணுவத்தில் ஏற்படும் அதிக அளவிலான மருத்துவ செலவுகள் மற்றும் பிளவுகள் இனி இருக்காது. நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த அறிவிப்பால் அமெரிக்க ராணுவத்தின் அனைத்து பிரிவுகளிலும் பணி புரியும் சுமார் 13 லட்சம் திருநங்கைகள் பாதிக்கப்படுவார்கள்.