தடை அதை உடை(The Wise Step) – மாணவர்கள் தேர்வு நேரங்களில் மன அழுத்தத்தை எதிர்கொள்ள உதவும் இலவச வகுப்பு

இந்த திட்டம், சென்னை நகரின் 200 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள 10, 11 மற்றும் 12 வது வகுப்புகளை சார்ந்த சுமார் 50,000 மாணவர்களை சென்று அடையும்.

30 ஜனவரி 2019, சென்னை: மார்ச் மாதம் மாதம் பொதுவாக மாணவர்களுக்கு குறிப்பாக பொது தேர்வில் பங்கு பெரும் மாணவர்களுக்கு மன அழுத்தம் நிறைந்த மாதமாக கருதப்படுகிறது. ‘ ‘தேர்வு பயம்’ மற்றும் முன்பு இருந்ததைவிட சிறப்பாக படவேண்டும் எனும் அழுத்தம், எப்போதும் அவர்களை அழுத்திக்கொண்டே இருக்கின்றன. இதய நிறைவு நிறுவனம் ‘தடை அதை உடை’ எனும் முன் முயற்சியின் மூலம் ஒரு மாத காலத்தில் சென்னை நகரின் 200 க்கும் மேற்பட்ட பள்ளிளை சென்று அடைய உள்ளது. இந்த முயற்சி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மேல் நிலை பள்ளி, தி நகர், சென்னை, யில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர், டாக்டர் எ கலாநிதி, அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் திரு எஸ் பிரகாஷ் , செயலாளர் மற்றும் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், இதய நிறைவு நிறுவனம், அவர்களும் கலந்து கொண்டார்.

இதயநிறைவு நிறுவனம், அரசு பொது தேர்வில் பங்கேற்கும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஒரு மணிநேர சிறப்பு பயிற்சி வகுப்பை திட்டமிட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொது தேர்வில் மன அழுத்தம் இல்லாத மனதுடன் தங்களை தயார் செய்யதுக்கொள்ள உதவும், அவர்களின் நினைவு சக்தியை வளர்த்து, நம்பிக்கையுடன் தேர்வுகளை மேற்கொள்வார்கள். இந்த பயிற்சி வகுப்பின் மூலம் மாணவர்கள், ஓய்வுநிலை பயிற்சி, உணர்ச்சிகளை கையாளுதல், சுய மேலாண்மை நுட்பங்கள், தேர்வில் கடுமையான கேள்விகளை திறமையுடன் கையாள்வது, உடல்நிலை மேலாண்மை, போன்றவை கற்றுக்கொள்வார்கள். இந்த தேர்வுப் பருவத்தில் சுமார் 50,000 மாணவர்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில், சென்னையில் 200 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பிப்ரவரி இறுதி வரை இந்த தேர்வு பருவத்தின் நேர்மறை நிகழ்ச்சி விரிவுபடுத்தப்படும்.

திரு. எஸ். பிரகாஷ் (+91 98400 96454), மண்டல ஒருங்கிணைப்பாளர், சென்னை மெட்ரோ மண்டலம், இதயநிறைவு நிறுவனம், The WiseStep – Overcome Exam Fear – தடை அதை உடை ‘ பற்றிய விவரங்களை அறிவிக்கும்போது. “நாம் ஒவ்வொருவரும், பள்ளி தேர்வின் மன அழுத்தத்தை சந்தித்து இருக்கிறோம், இது பெரும்பாலும் தவிர்க்க முடியாதது – ‘தடை அதை உடை’ என்பது மாணவர்களுக்கான இதயநிறைவு நிறுவனத்தின், விரிவான ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்ட பரிசு ஆகும். இது மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் மற்றும் அமைதியாக தேர்வுகளை எதிர்கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சக குழுக்களின் அழுத்தம், பெற்றோரின் அழுத்தம், மற்றும் எதிர்கால விளைவுகளை பற்றிய மன அழுத்தம் ஆகியவற்றில் திறம்பட கையாள்வதற்கு மாணவர்களை தயார்படுத்துகிறோம்”, என்று கூறினார்.

இதய நிறைவு என்பது சகஜ மார்கம் (அல்லது) இயற்கை பாதை எனும் ராஜ யோக தியானம் முறையின் ஒரு அணுகுமுறை ஆகும். இது இந்தியாவில் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் 1945 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஸ்ரீ ராம் சந்த்ர மிஷனில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த இதய நிறைவு தியான பயிற்சியை ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காணலாம். மேலும் பல தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களை சார்ந்த, இரண்டு மில்லியன் வல்லுநர்கள் தியானம் செய்கின்றனர். 130 நாடுகளில் சான்றளிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான தன்னார்வ பயிற்றுனர்கள், ‘ஹார்ட்ஸ்பாட்ஸ்’ எனும் , 5000 க்கும் மேற்பட்ட இதய நிறைவு மையங்கள் மூலம் உதவுகின்றனர். இந்த தியானப் பயிற்சி உலகம் முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது.

SRCM ஐ பற்றி: ஸ்ரீ ராம் சந்த்ர மிஷன் (SRCM) என்பது இலாப நோக்கமற்ற அமைப்பாகும், இது சகஜமார்க அமைப்பில் உள்ள இதயநிறைவு தியானம் மூலம் உலகெங்கிலும் உள்ள ஆன்மீக ஆர்வலர்களுக்கு ஆன்மீக பயிற்சியளிக்கிறது, இது, இதயத்தை அடிப்படையாக கொண்டு சமச்சீரான வாழ்க்கைக்கு ஒரு வழியை வழங்குகிறது. இது 1945 ஆம் ஆண்டில், ஷாஜகான்பூரை சேர்ந்த ஸ்ரீ ராம் சந்திரா அவர்களால் தனது ஆன்மீக ஆசிரியருக்கும், வழிகாட்டியுமாகிய, ஃபதேஹ்கரை சேர்ந்த ஸ்ரீ ராம் சந்திரா வின் பெயரால் நிறுவப்பட்டது.