கோவில்பட்டியில் மரக்கன்றுகள் நடும் பணிகள் – ஆணையர் தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டியில் இயங்கி வரும் ஜீவ அனுக்கிரஹா பொது நல அறக்கட்டளையின் பசுமை இயக்கம் சார்பில் கோவில்பட்டி நகரம் மற்றும் சுற்றுவட்டார பசுமையை உருவாக்கும் முயற்சியாக மரக்கன்றுகளை நடுவது மட்டுமின்றி அதனை பாரமரிப்பும் செய்து வருகின்றனர்.இந்த பணியின் ஒரு பகுதியா இளையரசனேந்தல் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது நகராட்சி ஆணையர் அச்சையா மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சுரேஸ், ரோட்டரி சங்க துணை தலைவர் ரவிமாணிக்கம்,கண்ணன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை தலைவர் முத்துராஜ்,ஜீவ அனுக்கிரஹா பொது நல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சண்முகவேல், சேகர், பசுமை இயக்க உறுப்பினர்கள் செந்தில்குமார், தங்கசாமி, அந்தோணிராஜ், நல்லதம்பி, பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.