தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

ஏழைக்குழந்தைகளின் நலன் கருதி பள்ளிகளை மூடும் திட்டத்தினை கைவிட வேண்டும், தொடக்க கல்வித்துறையை ஒழிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், 2018-2019ம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும், என்.ஹெச்.ஐ.எஸ் திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிகிச்சை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி தாலூகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பவுல் ஆபிரகாம் அந்தோணிராஜ் தலைமை வகித்தார், மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திராஜன் முன்னிலை வகித்தார், மாவட்ட செயலாளர் செல்வராஜ் விளக்கவுரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் சின்னதம்பி, வட்டார செயலாளர் உமா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான அரசு ஊழியர் சங்கத்தினர், ஆசிரியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.