தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், நீட் தேர்வு மூலமாக மருத்துவ மாணவர்களைத் தேர்ந்தெடுத்தால் மாநில கல்விமுறையில் படித்த மாணவர்கள் தங்களுக்கான வாய்ப்பை இழப்பார்கள் என்பதால் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.