காட்டாற்று ஓடை சகதியில் சிக்கிய பள்ளி பேருந்து

 

 

கோவில்பட்டி அருகேயுள்ளது அய்யநேரி கிராமம். இந்த கிராமத்தில் இருந்து இளையரசனேந்தல் சாலையை இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது. இளையரசனேந்தல், புளியங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அய்யநேரி கிராம மக்களுக்கு முக்கிய சாலையாக இந்த சாலை விளங்கி வருகிறது. சாலையின் நடுவே காட்டாற்று ஓடை ஒன்று உள்ளது. சாலை அமைக்கும் போதே மக்கள் பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து இருந்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளி பேருந்து ஒன்று புளியங்குளத்தில் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிகொண்டு, அய்யநேரிக்கு வரும் போது காட்டாற்று ஓடை பகுதியில் மழையின் காரணமாக தேங்கி இருந்த சகதியில் சிக்கி விபத்துக்குள்ளனாது. இதனை தொடர்ந்து அக்கிராம மக்கள் பேருந்தில் இருந்த மாணவர்களை பாத்திரமாக மீட்டு மாற்று பேருந்து மூலமாக பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் டிராக்டர் மூலமாக அந்த பள்ளி பேருந்தினை கிராம மக்கள் சகதியில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் அரசு தாமதிக்கமால் பாலத்தினை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.