சிவபெருமான் வேடமணிந்து, விநாயகர் சிலையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு
கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூரில் திருவண்ணாமலை கார்த்திகை தீப மடாலயத்திற்கு பாத்தியப்பட்ட நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதே போன்று தோணுகாலில் உள்ள சுந்தரவிநாயகர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்களும் சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீதும், அவர்களுக்கு துணை நின்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து கோவில் நிலங்களை மீட்க வேண்டும், மேலும் மந்திதோப்பு, லிங்கம்பட்டி பகுதியில் இலவச வீட்டுமனைப்பட்டா என்ற பெயரில் போலி பட்டாக்கள் அதிகளில் இருப்பதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை வேண்டும்.
இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் சிவபெருமான் வேடமணிந்து, அந்த அமைப்பின் உறுப்பினர் முருகன், விநாயகர் சிலையுடன் கோவில்பட்டி தாலூகா அலுவலகத்தில் சமபந்தி நிகழ்ச்யில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ்சை சந்தித்து, தங்களது கோரிக்கை மனுவினை அளித்தார். மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை தொடர்ந்து அங்கிருந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் தாலூகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.