ஆரோக்கியுமுடன் மக்கள் வாழ வேண்டும் என்றால்; சித்த மருத்துவம் மட்டுமே – அமைச்சர் கடம்பூர். செ.ராஜீ பேச்சு

ஆரோக்கியுமுடன் மக்கள் வாழ வேண்டும் என்றால்; சித்த மருத்துவம் மட்டுமே – அமைச்சர் கடம்பூர். செ.ராஜீ பேச்சு

கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் தனியார் திருமண மண்டபத்தில தமிழ் சித்தர் மாநாடு 14ந்தேதி முதல் 3நாள் நடைபெற்றது. மாநாடு நிறைவு நாளில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு மூலிகைகண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் சித்த மருத்துவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார். அப்போது பேசுகையில் இந்த மாநாடு காலத்திற்கேற்ற நிகழ்வு என்று முதல்வர் தெரிவித்து என்னை அனுப்பிவைத்தார் என்றால் அரசு சித்தமருத்துவம் மீது அரசு எவ்வளவு ஈடுபாடுவுடன் இருப்பதற்கு உதாரணம், சித்த மருத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு சித்த மருத்துவர்கள் குறித்த புள்ளிவிபரங்களை சேகரித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரிக்கு அதிக நிதி ஒதுக்கி, முதுநிலை படிப்புவரை தரம் உயர்த்தினர்.

இதே போன்று சென்னையில் உள்ள சித்தமருத்துவக்கல்லூரியில் ஆராய்ச்சி படிப்புகள் வரை தரம் உயர்த்தினர். இன்றைய காலத்தில் பெருகிவரும் மக்கள் தொகை, தொழிற்சாலைகள், வாகனங்களால் மாசுகட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இயற்கை மாற்றங்களும் நிகழ்ந்து வருகிறது. இன்றைக்கு 60வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆரோக்கியமாக உள்ளனர். ஆனால் 30,15, 10 வயது என்று 40 வயதிற்குட்பட்டவர்கள், சிறுநீரகம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்குட்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலை உள்ளது. அதற்கு காரணம் உணவு முறை மாற்றங்கள் தான், அந்த காலத்தில் இயற்கை உணவு, தற்போது செயற்கை உணவு முறைதான், இப்போதுள்ள பலரும் விவசாய முறைகளை பார்த்து இருக்கமாட்டார்கள், இன்றைக்கு விவசாய மட்டுமல்ல, வாழ்ககையே செயற்கை முறைக்கு போய்விட்டது.

இது கணிபொறிகாலம் என்பதால் மனிதனின் வாழ்வியல் முறையும் மாறிவிட்டது. பல்வேறு மாற்றங்கள் மற்றும் தாக்கத்தின் காரணமாக நீர் கூட மாசுபட்டுவிட்டது. மக்கள் தொகை பெருக்கத்தினால் கிடைக்கின்ற நீரை குடிக்கவேண்டிய நிலைமை இருப்பதால் பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை செல்லவேண்டி நிலை உள்ளது. பலர் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழந்து மருத்துவமனைக்கே செல்லவில்லை என்றால் அவர்கள் இயற்கையோடு எழிலோடு ஒத்துப்போகிற வாழ்க்கையாக இருந்தது. இதனால் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். ஆனால் கால மாற்றித்தின் காரணமாக நாம் ஆரோக்கியமான வாழ்வினை வாழமுடியாத சூழ்நிலை இருப்பதால் மீண்டும் ஆரோக்கியம் பெறவேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் பயன்படுத்திய மருத்துவமுறைகளையும், உணவு முறைகளையும் தேடிச்செல்லவேண்டி நிலை ஏற்பட்டுள்ளது.

சிகிச்சைகள் எத்தனை முறை கொடுத்தலும், நாம் இந்திய மருத்துவமுறை மற்றும் அலோபதிக்கு செல்வ வேண்டிய நிலை உள்ளது. பக்கவிளைவுகள் இல்லமால், மக்கள் ஆரோக்கியுமுடன் வாழ வேண்டும் என்றால் அதற்கு ஒரே மருத்துவம் சித்த மருத்துவம் மட்டுமே அதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது, அரசு சித்தமருத்துவத்தினை தேவையை உணர்ந்து தான், அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்து பிரிவு உள்ளது, தனி கட்டி வசதி, சித்த மருத்துவ பயிற்சி பெற்றவர்களை அரசு நியமித்துள்ளது, இன்றைக்கு அரசு ஆரம்பசுகாதார நிலையங்களில் கூட சித்த மருத்துவ பிரிவு உள்ளது. காலத்தின் சூழ்நிலை கருதி சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. சித்த மருத்துவர்களுக்கு தனி நலவாரியம், ஓய்வுதிய தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் மற்றும் சம்பந்தபட்ட அமைச்சர்களிடம் எடுத்து கூறி வரும் 29ந்தேதி தொடங்கும் சட்டமன்ற கூட்டதொடரில் பரிசிலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். விழாவில் திரளான சித்த மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.