வேதியியலுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்பட்டது. ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஜாக்கெஸ் டுபோஷே, ஜெர்மன் விஞ்ஞானி ஜொவகிம் பிராங்க் மற்றும் ஸ்காட்லாந்து நாட்டு விஞ்ஞானி ரிச்சர்ட் ஹெண்டர்சன் ஆகியோருக்கு இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக்குழு தலைவர் கோரன் ஹான்சன் தெரிவித்தார். பரிசுத்தொகையான 7 கோடி ரூபாய், மூவருக்கும் பிரித்துக் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.