விரைவில் புவனேஸ்வர் திருமணம்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், கடந்த மே மாதம் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் பாதியாக கட் செய்யப்பட்டு, தான் இருக்கும் பகுதியை மட்டுமே ஷேர் செய்து இருந்தார் புவனேஸ்வர். மேலும், “இது ஒரு டின்னர் டேட், முழு புகைப்படம் விரைவில்” என்ற புதிரை போட்டுவிட்டு, கிரிக்கெட் போட்டியில் பிசியாகி விட்டார். ரசிகர்களும் அது தெலுங்கு-பெங்காலி நடிகை அனுஸ்ம்ரிதி சர்க்கார் என்று பற்ற வைத்தனர்.

அது எரிந்து புகைந்து போன நிலையில், தற்போது ஐந்து மாதங்கள் கழித்து அந்த புதிருக்கு புவனேஸ்வர் விடை கொடுத்திருக்கிறார். “வாழ்க்கையின் பாதி.. நுபுர் நகர், புகைப்படம்” என்று அந்த முழு புகைப்படத்தையும் ஷேர் செய்ய, ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். விரைவில் புவனேஸ்வர் தனது திருமணத்திற்கான அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.