உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று காலை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இச்சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் டிரான்ஸ்போர்ட் நகரில் இருந்து சம்பர்க் வரை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
8.5கிமீ தூரம் பயணிக்க இருந்த இந்த ரயில் ஆலம்பாக் ரயில் நிலையத்தை அடையும் போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதல் பயணத்திலேயே நிறுத்தப்பட்டது. பயணிகளும் அங்கேயே இறக்கி விடப்பட்டனர். ஆரம்பிக்கப்பட்ட முதல் நாள் அதுவும் முதல் பயணத்திலேயே மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. இதுவரை இது போன்று எங்கும் நடந்ததில்லை எனவும் மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது. விரைவில் கோளாறு சரி செய்யப்பட்டு மெட்ரோ சேவை தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.