440 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

கேரளாவில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை ஒட்டி மது விற்பனை அமோகமாக இருக்கும். கடந்த ஆண்டு, 411 கோடி ரூபாய்க்கு மது விற்பனை இருந்தது. இந்த ஆண்டு சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகையின் போது, 440 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. கோட்டயம் அருகே உள்ள பாலா என்ற இடத்தில் செயின்ட் ஜோசப் ஓட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி கல்லூரி உள்ளது. ஓணம் பண்டிகை முடிந்து கல்லூரிக்கு வந்த மாணவர்களிடம், கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த பாதிரியார் ஒருவர், ‘பிரீத் அனலைசர்’ எனப்படும் மது அருந்திய கண்டுபிடிக்கும் கருவி மூலம் சோதனை நடத்திய வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு மாணவரும், கல்லூரிக்குள் நுழையும் முன், அந்த கருவி முன் ஊதும்படி பாதிரியார் வலியுறுத்தி உள்ளார்.  சோதனையில் இருந்து தப்பி ஓடிய மாணவர் ஒருவரை அந்த பாதிரியார் சோதனையை எதிர்கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார். இந்த காட்சிகள், கேரளாவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.