ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரத்தில் தேர்தல் அணைய பரிந்துரை தொடர்பாக சட்டபேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினர். ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார். முதல்வரின் பதிலில் திருப்தியில்லை என கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள தகவலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் சில அமைச்சர்கள் மற்றும் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் மீது வழக்க பதிவு செய்ய தலைமை செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து நாங்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வரின் பதிலில் திருப்தி இல்லை என்றும், ஏ-1 குற்றவாளியே தமிழக முதல்வரின் பெயர் உள்ளது. வழக்கை பதிவு செய்யவேண்டியது காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளது அப்படி இருக்க முதல்வர் மீது எப்படி விசாரணை நடைபெறும். ஆகவே முதல்வர் மற்றும் குற்றச்சாட்டப்பட்டுள்ள அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.