மாபெரும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை சார்பாக, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மற்றும் மதிப்பிற்குரிய முதன்மை செயலர் அவர்களின் ஆணைக்கு இணங்க, இன்று ( 14-10-2017) தொடர் நிகழ்வாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு அசோக் நகர் பெண்கள் பள்ளியில் நடைபெற்றது. நிலவேம்பு குடிநீர் சுமார் நான்காயிரம் மாணவியர்களுக்கும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்க்கும் வழங்கப்பட்டது.

பள்ளி வளாகம் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது. கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவிகள் உற்சாகமாக பல கேள்விகள் கேட்டு தம் சந்தேகங்களை தீர்த்துக்கொண்டனர். மாணவியர் டெங்கு ஒழிப்பு உறுதி மொழி எடுத்தனர். Instant நிலவேம்பு பொடி ஒவ்வொரு மாணவியர்க்கும் வழங்கப்பட்டு அவர்தம் குடும்பம் மற்றும் உற்றார் உறவினர் பயன்பெறும் வகையில் தயாரிக்கும் முறையும் பருகும் அளவும் அறிவுறுத்தப்பட்டு விநியோகிக்கப்பட்டது.